YUVAN பிறந்தநாளுக்கு, சிம்பு, தனுஷ் கொடுத்த சர்பரைஸ் கிஃப்ட் ! எமோஷனல் ஆன யுவன் !

இளையராஜா மகன் இவன் என்று யுவனை காட்டிய மக்கள், இன்று யுவன் சங்கர் ராஜாவின் அப்பாதான் இளையராஜா என்று சொல்ல வைத்திருக்கிறார். அரவிந்தன் என்று சாதாரணமாக ஆரம்பித்த பயணம் தீனா என்றும் படத்தில் உச்சம்பெற்று இன்று வலிமையில் வலிமையோடு வரப்போகிறார் யுவன்.
ஆரம்பத்தில் இவர் இசையமைத்த படங்கள் எதுவும் சரியாகப் போகாததால் இவரை ராசியில்லாத இசை அமைப்பாளர் என்று முத்திரை குத்தியது இந்த திரை உலகம். அதன்பிறகு தீனா வந்தது எல்லாவற்றையும் மாற்றியது என்று யுவன் ஒரு பேட்டியில் சொன்னது ஞாபகம் வருகிறது.
அரவிந்தன் முதல் வலிமை வரை இவர் இசை அமைத்த பாடல்கள் இன்று இளைஞர்களின் தேசிய கீதமாக இருப்பது நிஜம். நடுவில் சில காலம் ஓய்வு எடுக்கப் போன யுவனை மக்கள் ஏளனம் செய்ய, ரவுடி பேபியாக மீண்டு வந்தார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் யுவன்சங்கர்ராஜா நேற்று இரவு பார்ட்டியில் நண்பர்கள் ஆன சிம்பு, தனுஷுடன் ஆடி பாடி மகிழ்ந்துள்ளார்.
இவரின் பிறந்த நாள் பரிசாக தனுஷும், சிம்புவும் இவர் இசை அமைத்த பாடல்கள் சிலதை பாடி இவரை மகிழ்வித்து இருந்தார்கள். அதன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Views: -

0

0