YOUTUBE இர்பானுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சுடுச்சு..கல்யாணம் எப்போ தெரியுமா ?

யூடியூப் பிரபலம் Irfan-ஐ தெரியாதவர்கள் அனேகமாக இருக்க முடியாது. அவரது ஒவ்வொரு வீடியோவும் யூடியூபில் பிரபலம். இவரின் வீடியோக்களுக்கு இளைஞர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

பிரபல உணவு விமர்சகர் இர்பானுக்கு நேற்று திருச்சியில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் “நான் சொல்ல வேணாம்னு நெனச்சேன்..” ஆனாலும் வெளிய லீக் ஆகிடுச்சு, அதனால சொல்லுறேன் எனக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு கல்யாணத்துக்கு இன்னும் 4 மாசம் இருக்கு” என்று வெளிப்படையாக கூறியுள்ளார். யூடியூபில் இர்பான் வியூஸ் என்ற சேனலை துவங்கி இன்று கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களை தன்வசம் வைத்துள்ளார்.
இவர் போட்ட வீடியோக்களால் பல சிறிய ஹோட்டல்கள் கூட இன்று நல்ல நிலைமைக்கு வந்துள்ளன. அந்த வகையில் இவரது வீடியோக்கள் முக்கியமான காரணம்.

Views: -

0

0