கல்யாணத்தை நினைச்சா அந்த விஷயம் தான் ஞாபகத்துக்கு வருது.. மனம் திறந்த சதா..!


நடிகை சதா Torch Light என்னும் படம் மூலமாக Re-entry தந்தார். ஆனால் படம் ஓடவில்லை. மேலும், கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

sadha - updatenews360

அதற்காக, உடல் எடையை குறைத்து, அழகுகளை காட்டி Video ஒன்றை வெளியிட்டு வருகிறார். இந்த வயசிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் சதா உள்ளார் என, அவரை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

sadha -updatenews360

போயா போ… போ… என்று ஜெயம், படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமான சதா 2005இல் பிரபலமானார். இவர் அந்நியன் படத்தில் சியான் விக்ராமோடு நடித்திருந்தார். ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

அந்த படத்தை தொடர்ந்து வர்ணஜாலம், எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி உட்பட பல படங்களில் நடித்தார். இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை. இப்போது வீடியோக்கள் வெளியிட்டு Comeback- ககாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே, சதா தற்போது லைவ் வீடியோவில் கண்ணீர் விட்டு இருக்கும் சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, Earthlings Cafe என்ற பெயரில் அவர் மும்பையில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். பல வருடங்களாக கடினமாக உழைத்து அந்த cafe-ஐ அவர் பெரிய அளவில் வளர்த்து இருக்கும் நிலையில், திடீரென அந்த இடத்தின் உரிமையாளர் காலி செய்யும்படி கூறிவிட்டதாக தெரிகிறது.

அதனால் இனி Earthlings Cafe நடத்தமுடியாது என சதா கண்ணீர் விட்டிருக்கிறார். மூடுவதை விட வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி செய்யுங்கள் என ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், 39 வயதாகியும் நடிகை சதா ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு தற்போது அவர் பதில் அளித்துள்ளார். திருமணம் செய்தால் சுதந்திரத்தை இழக்கிறோம் என்றும், அந்த பந்தத்தில் புரிதல் ஏற்படலாம் ஏற்படாமலும் போகலாம். தன்னுடைய ஆசைகளை திருமணம் செய்தால் அதை தொடர முடியாது என்றும், சமீபத்தில் பல திருமணங்கள் தோல்வியில் முடிந்துள்ளதாகவும், அதனால் தான் திருமண எண்ணம் தனக்கு இன்று வரை தோன்றவில்லை என்று நடிகை சதா தெரிவித்துள்ளார்.

15 July, 2023, 4:31 pm

Views: -

0

2

Tags: sadha
More Stories