என்னடா இது? ஐஸ்வர்யா ராயை Gift Box’ல வச்சி Pack பண்ணியிருக்கீங்க – கேன்ஸ் விழா போட்டோஸ்!


இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக பொன்னியின் செலவன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் மீண்டும் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் தற்போது பிரெஞ்சு ரிவியராவில் 21வது முறையாக கேன்ஸ் திரைப்பட விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துக்கொண்ட ஐஸ்வர்யா ராய், லைட்வெயிட் அலுமினியம் டீடெய்யில் உடன் பளபளக்கும் சில்வர் கௌனை அணிந்திருந்தார். அதில் லாங் ஃபிளெர்ட் ட்ரேயில் உடன் ஒரு மிஸ்டிக்கல் ஹூட் இணைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆடை பார்ப்பதற்கு ஒரு கிப்ட் பாக்ஸ் தோற்றத்தில் இருந்தது. எனவே நெட்டிசன்ஸ் சிலர் என்னடா ஐஸ்வர்யா ராய்யை கிபிட் பாக்ஸ்ல போட்டு கொண்டுவந்திருக்கீங்க என கிண்டலாக கூறி வருகிறார்கள். மேலும் , சிலர் இந்த உடையில் ஐஸ்வர்யா ராய் ” chicken shawarma ” போன்று இருப்பதாக ட்ரோல் செய்துள்ளனர்.

19 May, 2023, 9:25 pm

Views: -

0

0

More Stories