திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் நயன்தாரா..Viral Video

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.
இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இந்நிலையில், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா.
இந்த நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை அடுத்து காத்துவாக்குல 2 காதல் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடலில் விதவிதமான கெட்டப்புகளில் அனிருத் தோன்றி அசத்தி இருந்தார் என்பதும் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் இணையதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஷாருக்கான் அவர்களுடன் LION என்னும் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் தற்போது, நடிகை நயன்தாரா, அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
கோவிலுக்கு வெளியே வந்த அவர்களுடன் கோயில் நிர்வாகிகளும் ரசிகர்களும் அவர்களுடன் புகைப் படம் எடுக்கப்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Views: -

1

1