Video : சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து வந்த ரஜினிகாந்த் ! செம்ம Mass Entry !


தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியாவிற்கு ஐகான் ஆக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அண்ணாத்த படம் தயாராகி வருகிறது. சிறுத்தை வீரம் விவேகம் போன்ற படங்களை எடுத்த சிவா இந்த படத்தை இயக்குகிறார். கொரோனா காலகட்டம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு சில காலம் தள்ளி போனது. படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்படவே படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

இடையில் ரஜினிகாந்த் உடல் நிலை மோசமானதால் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றார். அதன்பின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டது. டப்பிங் பணிகள் நடந்து வந்த நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்தும், அவ்வபோது அவர் ரெகுலர் செக்கப் காரணமாக அமெரிக்கா செல்வது வழக்கம் இந்த முறையும் பரிசோதனைக்காக கடந்த மாதம் சென்றார்.

விமான சேவை இல்லாததால் தனி விமானம் மூலம் செல்ல அனுமதி வாங்கி சென்றார். தற்போது சிகிச்சை எல்லாம் நல்லபடியாக முடிந்து மீண்டும் பழைய கம்பீரத்தோடு வேகத்தோடு சென்னைக்கு திரும்பி வந்துள்ளார். அதன் வீடியோ தற்போது மிகவும் வைரலாக பரவுகிறது.

9 July, 2021, 9:35 am

Views: -

2

0

More Stories