விஜய் டிவியில் இருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார் ! பின்னணி என்ன ?

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா மகள் தான் வனிதா, இவரின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கால ஓட்டத்தில், நடிகை வனிதா பிரபல நடிகரான ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இதில் ஸ்ரீஹரியை கொத்தாக வனிதாவிடம் இருந்து ஆகாஷ் கொண்டு சென்றார். பிறகு இருவரும் விவாகரத்து பெற்றனர். சில வருடங்கள் கழித்து வனிதா 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகள் உள்ள நிலையில் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு கடந்த வருடம் வனிதாவுக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்தது. உடனே பீட்டர் பால் என்னுடைய கணவர் என எலிசபெத் ஹெலன் தெரிவித்ததை மக்கள், வனிதாவை விளாசி எடுத்தார்கள்.

அதன் பிறகும் Terms ஒத்துவராமல் 4 மாதங்களில் வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்துவிட்டார்கள். இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் Single வாழ்கையை கெத்தாக வாழ்ந்து வரும் நிலையில்,
சற்று முன் நடிகை வனிதா விஜய் டிவியில் Hot Topic-ஆ போய் கொண்டிருக்கும் ப் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவருடைய நடனத்திக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து கொண்டிருந்தது. இந்த நிலையில், திடீரென அவர் விலகியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை கொடுத்து உள்ளது.
மேலும் தான் ஏன் விலகினேன் என்று ஒரு பெரிய அறிக்கை மூலமாக கூறியிருந்தார். அதாவது இவரை போன்ற சீனியர் நடிகர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் காரணமாக பொறாமைப்படுகிறார்கள் என்றும், அதனால் தன்னை உருவகேலி செய்கிறார்கள், என்னை தொந்தரவு செய்கிறார்கள். அதனால் நான் விலகுகிறேன். என்றும் அவர் தன்னுடைய விலக என்ன காரணம் என்பதையும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் வனிதாவுடன் ஜோடியாக ஆடிய சுரேஷ் சக்கரவர்த்தி l “வனிதா, நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. உங்களுடைய நிலைமையை எனக்கு புரிகிறது. உங்களுடைய எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Views: -

0

0