ச்சீ, கருமம்.. இதுலயெல்லாம பிரியாணி செய்வாங்க? வனிதாவை விளாசும் நெட்டிசன்கள்.. கூலாக பதிலளித்த வனிதா

1

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா மகள் தான் வனிதா, இவரின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் எல்லா இடங்களிலும் பரிச்சயமானார். அதே நேரம் இவர் இருக்கும் இடமெல்லாம் சர்ச்சைகளில் சிக்கினார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றார்.

அதன்பின் தனியாக யூடியூப் சேனல் ஆரம்பித்து சமையல் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரது சேனலுக்கு அமோக வரவேற்பு இருந்தது. இந்நிலையில் இவர் தற்பொழுது செய்த பிரியாணி வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் இந்துவா?, கருமம், நீங்கள் வெளியிட்டதிலேயே இதுதான் மோசமான வீடியோ. என்று சிலர் கமெண்ட் செய்து வனிதாவை திட்டித் தீர்த்தனர். இந்நிலையில், இந்த சர்ச்சைக்களுக்கு கூலாக பதிலடி கொடுத்துள்ளார் வனிதா.மக்களே என்ன ஆச்சு உங்களுக்கு.? என்னுடைய நட்பு வட்டத்தில் நிறைய மலையாளிகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இது வெறும் உணவு தான். நான் ஏழு வயதில் இருந்தே அமெரிக்காவில் வளர்ந்தவள். சிறு வயதிலிருந்தே பல நாட்டு உணவு வகைகளை சாப்பிட்டு இருக்கிறேன். நம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். அதை பிறர் மீது திணிக்கக் கூடாது.
இது பிடிக்கவில்லை என்றால் வீடியோவில் என் மகள் சொன்னது போல், உங்களுக்கு பிடித்த கறியையோ, காய்கறியயோ வைத்து இதே பிரியாணியை சமைத்து சந்தோஷமா சாப்பிடுங்கள் என்று வனிதா அதில் குறிப்பிட்டுள்ளார்.

4 December, 2021, 4:24 pm

Views: -

0

0

More Stories