தலைக்கு வயசாகிடுச்சு சொன்னவன்லாம் Line-ல வா.. வலிமை Stills !

1

தல அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கிறார் அஜித்.

அமராவதி தொடர்ந்து இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை வரை அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

தற்போது வலிமை படத்தின் ரிலீஸ் தேதி பொங்கல் என்று முடிவாகியுள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் படத்தின் Glimpse என சில நொடிகள் மட்டும் வலிமை படத்திலிருந்து வெளியிட்டுள்ளார்கள்.

இதில் வரும் “நான் Game- அ ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி” என்று தல பேசும் மாஸ் வசனம் ரசிகர்கள் மத்தியில் Trending.

கடந்த வாரத்தை தொடர்ந்து இந்த வாரமும் வலிமை படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்கள் வெளியிட பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், தலைக்கு வயசாகிடுச்சு என்று சொன்னவன் எல்லாம் Line-ல வா என்று கூறுகிறார்கள்.

13 October, 2021, 12:09 pm

Views: -

8

0