மனைவியை ஒதுக்கி வரும் நடிகர் வடிவேலு..- அந்தரங்க விஷயத்தை வெளியிட்ட பிரபலம்..!

தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, சில காரணங்களுக்காக, சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

பின்னர், தடையை நீக்கியதற்கு பின், 4 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் கதாநாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்றது. சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மாமன்னன் படம் ஜூன் 29 -ம் தேதி வெளியாகவுள்ளது.

வடிவேலுவின் நிஜ வாழ்க்கை குறித்து பல விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் வடிவேலு மதுரைக்கு செல்லும் போது தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் செல்ல மாட்டார் எனவும், இதற்கு குடும்பம் தடையாக இருக்கும் என்பதால் அவர்களை பெரும்பாலும் அழைத்துச் செல்வது இல்லையாம், வடிவேலு எப்போதும் சில நண்பர்களுடன் தனி பிளைட்டில் செல்வார் என சினிமா பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு காரணம் நண்பர்களுடன் மது அறிந்து விட்டு ஜாலியாக செல்வதற்காக மனைவியுடன் செல்ல மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Views: -

0

0