வடசென்னை 2 படத்திற்கு முன் ராஜன் வகையறா – சின்ன வயது ராஜானாக நடிப்பது இவர்தானாம்….!

தமிழ் சினிமா கண்ட வெற்றி இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். அவரது படங்களுக்கு பெரும் பலமாய் இருப்பது அவரது எழுத்துக்கள் தான். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் . தனுஷ் நடிப்பில் வந்த பொல்லாதவன் படத்தின் மூலமாக தன்னை ஒரு இயக்குநராக காட்டியவர் வெற்றிமாறன். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆடுகளம், நான் ராஜாவாபோகிறேன், விசாரணை, வட சென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது சூரி ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூரியின் தந்தையாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தையும் இயக்கி வருகிறார். விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை 2 படமும் உருவாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்தப் படத்தின் ப்ரீக்குவல் தயாராக இருக்கிறது.

அந்த ப்ரீக்குவல் ராஜன் வகையறா என்ற பெயரில் சீரிஸாக தயாராக இருப்பதாகவும், ராஜனின் 15 – 24 வயது கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இதில் கென் கருணாஸ் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கான பயிற்சிகள் கெவினுக்கு வழங்கப்பட்டு வருகிறதாம். ஏற்கனவே கெவின் கருணாஸ் வெற்றிமாறனின் அசுரன் படத்தில் மகன் கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
Views: -

0

0