வலிமை UPDATE கேட்ட South Korea அஜித் ரசிகர் ! வைரல் வீடியோ !

1

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நாயகனாக உருமாறி இருக்கிறார் தல அஜித்குமார். ஆரம்பத்தில் ஏகப்பட்ட அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்து தனது கடின உழைப்பால் மேலே வந்தார். கார் ரேஸர் ஆக இருந்தபோது ஏற்பட்ட விபத்தில், அவர் உடம்பில் அதிகமான காயங்கள் ஏற்பட்டு நிறைய ஆபரேஷன்கள் செய்யப்பட்டன.

பின் மீண்டு வந்தவர், நடிப்பு மட்டுமில்லாமல் கார் ரேஸர், பைக் ரேசர், ட்ரோன் பற்றி மாணவர்களுக்கு சொல்லித் தரும் ஆசிரியர் என பலதுறைகளில் வெற்றி பெற்று வருகிறார். சமீப காலமாக துப்பாக்கி சுடுதலில் அதிக ஈடுபாடுடன் இருந்து வருகிறார். தற்போது வலிமை படத்தில் நடித்தார் தல. ஆனால் அந்த படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் வராததால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். பர்ஸ்ட் லுக் மட்டுமாவது விடுவார்களா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

ஆனால் தற்போது ஊர் முழுக்க வலிமை அப்டேட் பற்றிய பேச்சு தீவிரமாக பரவி வருகிறது. அருள் வாக்கு கொடுக்கும் சாமி முதற்கொண்டு, குறிபார்த்து சொல்லும் ஜோசியக்காரன் கூட விட்டு வைக்காமல் வலிமை Update கேட்கிறார்கள் தல ரசிகர்கள். இதுவே ஒரு வகையான நல்ல விளம்பரம் யுக்தியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உலகம் முழுக்க பரவிக் கிடக்கும் இந்த வலிமை அப்டேட் பற்றிய பேச்சு, சவுத் கொரியாவையும் விட்டுவைக்கவில்லை. சவுத் கொரியாவில் இருந்து ரசிகர் ஒருவர் தனது சமூக வலைதளங்களில் அப்டேட் என்று கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். காலையில் கண்விழித்து பார்த்த ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகவே பகிர்ந்து வருகிறார்கள்.

10 July, 2021, 9:34 am

Views: -

1

0

More Stories