“மன்னிக்கவே முடியாத அலட்சியம்”..-பிரியா ஆனந்த் போட்ட வைரல் ட்வீட்..!


வாமனன் படம் மூலம் அறிமுகமாகி, எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

priya anand-updatenews360

ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.

priya bhavani shankar - updatenewse360

தற்போது எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.

இதனிடையே, கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த இரயில் விபத்தால் பலி எண்ணிக்கை தற்போது வரை உயர்ந்துக் கொண்டே போகிறது. 280 பேருக்கு மேல் பரிதாப மரணம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து பலரும் பதிவுகள் போட்டுவரும் நிலையில், நடிகை ப்ரியா ஆனந்த்தும் கோபமாக டுவிட் செய்து உள்ளார். அதில் அவர், மனம் உடைந்து போய் விட்டது என்றும், இது ஏற்றுக் கொள்ள முடியாத அலட்சியம் என கோபமாக டுவிட் செய்துள்ளார்.

3 June, 2023, 8:59 pm

Views: -

0

0

More Stories