முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் த்ரிஷா..! எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்..!


ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பினார்கள்.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியன் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவரும் இந்த படத்தை பயங்கரமான எதிர்பார்ப்பில் இருக்கிறார். தற்போது அவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

முதல்முறையாக தெலுங்கில் ஒரு வெப்சீரிஸில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ‘பிருந்தா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் பிருந்தா வேடத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருசில நாட்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

16 October, 2021, 7:45 pm

Views: -

3

3

More Stories