நான் பண்ண பெரிய தப்பு விஜய்கூட அதை செய்யாமல் விட்டது தான்.. புலம்பி தவிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். 90ஸ் பிற்பாதியில் தொடங்கி தற்போது வரை எட்டி பிடிக்க முடியாத உச்சத்தில் கொடிகட்டி பறந்து வருகிறார். பிரபல இயக்குனர் S A சந்திரசேகர் அவர்களின் மகனும் ஆவார். தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இவரது திரைப்படங்கள் வெளியானாலே சமூக வலைத்தளங்கள் எங்கும் இவரது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து விடுவார்கள்.

சமீப காலமாக, விஜய்க்கும் அவரது பெற்றோருக்கும் உள்ள கருத்து வேறுபாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், விஜய்க்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகவிருப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. காரணம், நடிகர் விஜய் திரைப்பட விழா, ஆடியோ வெளியீட்டு விழா, பிரபலங்களின் திருமணம் எது என்றாலும் தனது மனைவியை அழைத்து வருவார்.

ஆனால் அட்லீ-பிரியா சீமந்த நிகழ்ச்சிக்கும், வாரிசு ஆடியோ வெளியீட்டிலும் தனது மனைவியை அழைத்து வரவில்லை. இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிய இருக்கிறார்களோ என பேச்சு அடிபட்டது.

மேலும், பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷுடன் விஜய் நெருக்கமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் விஜய்யை பற்றி ஒரு மேடையில் பேசிய வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ பல ஆண்டுகளுக்கு முன்னர் கீர்த்தி சுரேஷுக்கு நடந்த சம்பவம் பற்றி தான் இந்த வீடியோவில் அவர் தெரிவித்து உள்ளார். அதாவது, போக்கிரி படத்தின் 100 வது நாள் சக்சஸ் சமயத்தில் விஜய், கேரளாவுக்கு சென்று உள்ளார்.

அந்த சமயத்தில், தான் செல்போனில் அவரை மட்டுமே புகைப்படம் எடுத்ததாகவும், தான் செய்த பெரிய தப்பு அவரை மட்டும் தான் புகைப்படம் எடுத்தது என்றும், அப்போது செல்ஃபி எல்லாம் தெரியாது எனவும், அவருடன் சேர்ந்து தன்னையும் எடுத்திருந்திருக்கலாம் அது ஒரு பொக்கிஷமாக இருந்திருக்கும் என்று ஏக்கத்துடன் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Views: -

0

0