அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுறேன்..! பரிதாப நிலைமையில் துள்ளுவதோ இளமை நடிகர் !

சினிமா துறையில் ஒரு படத்தில் நடித்து விட்டு காணாமல் போனவர்கள் பல பேர் உண்டு. சில படங்களில் மட்டும் நடித்து விட்டு காணாமல் போன நடிகர் அபினய், தற்போது பரிதாபமான நிலையில் இருக்கிறார்.
கஸ்தூரிராஜா இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் அவரின் தொடராக நடித்தார் நடிகர் அபினய். தனுஷ் உட்பட ஷெரின் நடிகர் அபினய் ஆகிய பலர் புதுமுகங்களை அறிமுகம் ஆனார்கள். அதன்பின் அவருக்கு சாக்லேட் பாய் முத்திரை விழுந்தது. பெரும்பாலும் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் முத்திரை விழுந்துவிட்டால் அதை மீறி ஆக்சன் படங்களில் நடிப்பது கடினம். அதே நிலை தான் அபினய்க்கும் ஏற்பட்டது.

சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால் எதுவும் ஓடவில்லை. அமெரிக்க மாப்பிள்ளை, நண்பர்கள் கதாபாத்திரத்தில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விளம்பரங்களிலும் நடித்தார். இப்படி ஒரு நிலைமையில் பேட்டியளித்த அபினய், துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு எட்டு படங்களில் என்னை புக் செய்தார்கள். ஆனால், நான் ஹீரோவாக நடித்த இரண்டாவது படம் ஓடவில்லை என்று மீதி படங்கள் அனைத்தும் போய்விட்டது. அம்மா இறந்த பின்னர் வறுமை. இருந்த அனைத்தையும் வித்துட்டேன். அம்மா உணவகத்தில் தான் சாப்பிட்டேன். அதுனால் தான் இப்படி உடல் எடை குறைந்து விட்டது என மிகவும் உருக்கமுடன் பேசி இருக்கிறார் அபினய். இவரது இரண்டாம் படத்திற்கான சம்பளம் இன்னும் 60 ஆயிரம் பாக்கி உள்ளது என்றும் கூறியுள்ளார்.
Views: -

2

2