வலிமை ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு? ஓடிடியில் வெளியாக வாய்ப்பு : அஜித் ரசிகர்கள் அதிருப்தி!!

ஹெச். வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்துள்ள அஜித்தின் வலிமை திரைப்படத்திற்கு பலத்த எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. படம் ஆரம்பித்தது முதல் வலிமை அப்டேட் கேட்டு டிவிட்டரில் அஜித் ரசிகர்கள் அதகளப்படுத்தியிருந்தனர்.
பல பொது இடங்களிலும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு நச்சரித்தனர். இறுதியாக ஒரு வருடம் கழித்து அடுத்தடுத்து வலிமை படத்தில் அப்டேட் கிடைத்தது.
வலிமை படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியயில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ட்ரெய்லர் வெளியானதும் படத்திற்கு எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியது.
இந்த நிலையில் அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருவதால் வலிமை படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் 50% சதவீதம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் தியேட்டர்களில் படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் அனுமதி குறைவால் படத்திற்கான லாபம் ஈட்ட முடியாது என்பதால் படத்தை ரீலிஸ் செய்வதை தள்ளிவைக்கலாம் என கூறப்படுகிறது.
Views: -

0

0