சூப்பர்ஸ்டார் 169வது படத்தில் இணைந்த இளம் நடிகர்கள் : 12 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணையும் நடிகை !!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் அண்மையில் வெளியானது அண்ணாத்த திரைப்படம். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பெரிய பட்டாளமே நடித்திருந்தாலும் படம் பெரிதாக பேசப்படவில்லை.
இதனால் அடுத்த படம் பெரிய ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என எண்ணிய ரஜினி தீவிர கதை சேகரிப்பில் ஈடுபட்டார். இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார் என பேசப்பட்டு வந்த நிலையில், தேசிங்கு பெரியசாமி, கேஎஸ் ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், வெங்கட்பிரபு, மிஷ்கின் என பல இயக்குநர்கள் பெயர் அடிப்பட்டது.

ஆனால் கடைசியாக வந்த நெல்சன் சொன்ன கதையை கேட்டு ஒகே சொன்ன தலைவர், மற்ற இயக்குநர்களை உடனே நிராகரித்து படத்தின் வேலையை தொடங்க சொல்லிவிட்டாராம்.
இதையடுத்து படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என படக்குழு அறிவித்தது. இதனால் உச்சக்கட்ட சந்தோஷத்தில் ரஜினி ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் படத்தில் இளம் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நெல்சன் படத்தில் எப்போதும் யோகி பாபு இருப்பார். அதே போல டாக்டர் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயனின் காம்போ ரசிக்கப்படுகிறது.

இதனால் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார், சிம்புவும் இந்த படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா அருள்மோகன் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் சில நடிகர்கள் நடிகைகள் பெயர்கள் அடிபடுகிறது. அண்ணாத்த போல இந்த படத்திலும் ஏராளமான நட்சத்திரங்கள் இணைய உள்ளனர். இன்னும் நிறைய அப்டேட் வர உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Views: -

0

0