கர்ணனுடன் இணையும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!


இயக்குனர் ராமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து, “பரியேறும் பெருமாள்” என்ற முதல் படத்திலேயே, தமிழ் சினிமாத்துறையில், தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ்.


பின்னர், இவரது இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில், கர்ணன் படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றுத் தந்தது. கர்ணன் படத்தை பார்த்த திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பாராட்டினர். இதனிடையே, இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில், நடிகர் விக்ரம் மகன், துருவ் விக்ரமின் பெயரிடாதப்படத்தை இயக்கி வருகிறார்.

இதனிடையே, சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது முழு நேர அரசியல் பணியில் ஈடுபட போவதாக முடிவெடுத்துள்ளார். இதனால், கடைசியாக, மாரிசெல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டணியில், ஏற்கெனவே, மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

3 January, 2022, 5:03 pm

Views: -

0

0

More Stories