“மாநாடு” பட வெற்றியால் எக்குதப்பாக சம்பளத்தை உயர்த்திய வில்லன் நடிகர்..!

தற்போது, தமிழ் திரையுலகில், அனைத்து இயக்குனர்களும் வில்லன் கதாபாத்திரத்திற்கு தேர்தெடுக்கும் நடிகர் என்றால் அது எஸ்.ஜே.சூர்யா தான். நடிகர்கள் அஜித், விஜய் போன்ற, தமிழ் முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். வியாபாரி, இசை போன்ற படங்களில் நடிகராகவும் கலக்கி இருப்பார் எஸ்.ஜே.சூர்யா.

சமீபத்தில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில், மாநாடு திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களை ரசிக்க வைத்தது. அதிலும், வில்லன் கதாபாத்திரத்தை எடுத்து நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இதனிடையே, மாநாடு வெளியாவதற்கு முன்பாக, நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதற்கு இரண்டு கோடியும், ஹீரோவாக நடிப்பதற்கு ஒரு கோடியும் கேட்டு வந்தார்.
இந்த நிலையில், மாநாடு படத்துக்குப் பிறகு அவரது சம்பளம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. விஷாலின் 33-வது படமான மார்க் ஆண்டனியில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா 5 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Views: -

0

1