இனிமே நடிச்சா ஹீரோ தான் அடம் பிடிக்கும் பிரபல காமெடி நடிகர்..!

சிறு சிறு காதபாத்திரத்தில் நடித்து திரையுலக பயணத்தை துவங்கினார் நடிகர் சூரி. “வெண்ணிலா கபடிக்குழு” படத்தில் பரோட்டா பிரியராக நடித்ததன் மூலம் தமிழ் திரையில் பிரபலமானார். இதை தொடர்ந்து பல படங்களில் சூரி நடித்து இருந்தாலும், அவரது காமெடிகள் ரசிக்கும்படியாக இல்லை. ஆனால், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் கோடி என்கிற கதாபாத்திரம் மட்டுமே ரசிகர்கள் மனத்தில் ஆழமாக பதிந்து உள்ளது என்றே கூறலாம்.

விஜய், அஜித், சூர்யா, ரஜினி என தமிழ் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள சூரி, தற்போது மாறுபட்ட கதை களத்தை தேர்ந்தெடுக்கும் இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார் நடிகர் சூரி.

மேலும் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், இயக்குனர் கவுதம் மேனன் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.

தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடிக்க, சூரியிடம் கேட்டதற்கு, இனிமே காமெடி ரோலில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டாராம்.
இந்த நிலையில், நடிகர் சூரி மேலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அமீர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தான் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Views: -

3

0