‘யாரையும் நம்பக்கூடாது’ என்கிறாரா இயக்குனர் செல்வராகவன்.? அடுத்த விவாகரத்திற்கு ரெடியாகிறாரா.?

தமிழ் சினிமாவில் தனக்கென அடையாளத்தை பதித்தவர் தான் இயக்குனர் செல்வராகவன். ‘துள்ளுவதோ இளமை’ ‘காதல் கொண்டேன்’ ‘7ஜி ரெயின்போ காலனி’ ‘புதுப்பேட்டை’ ‘ஆயிரத்தில் ஒருவன்’ ‘என்.ஜி.கே.’ உள்பட காலத்திற்கும் அழியாத பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், ட்விட்டர் பக்கத்தில் சமீப காலங்களில் அவர் பதிவிடும் பதிவுகள், வேதனையின் உச்சத்தின் வெளிப்பாடு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கடந்த டிசம்பர் 3ஆம் தேதி தனது ட்டுவிட்டர் பக்கத்தில், ‘அவசரத்தில் எந்த முடிவும் எடுக்காதீர்கள்’ என்ற தொடர்பான கருத்தை ட்வீட் செய்திருக்கிறார். அதில் ‘தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.’

டிசம்பர் 12 ஆம் தேதி, ‘ நம் வேதனைகளை கேட்க இங்கு யாருக்கும் நேரமில்லை. அப்படியே கேட்பது போல் தெரிந்தாலும் அது போலி. நடிப்பு. அதற்கு பதிலாய் கடவுளிடம் சொல்லுங்கள். மாற்றத்தை உணர்வீர்கள்.’ எனப் பதிவிட்டிருக்கிறார்.

டிசம்பர் 26 ஆம் தேதி, ‘ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா, அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தை விட மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்.’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மேலும் ஒரு தத்துவத்தை அவரது ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுருக்கிறார். “வாழ்க்கையில் மிகக் கொடுமை’ என்ன பாத்துக்க யாருமே இல்லையே” என்ற புலம்பல்தான். உங்களை எதற்கு ‘ஒருவர் ‘ பார்த்துக் கொள்ள வேண்டும் ? அது மருத்துவமனையில் நோயாளியாய் இருப்பது போல.! உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அது கடவுளே உங்களை பார்த்துக் கொள்வது போல்.!’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

“தனக்கென யாரும் இல்லை” என்பது போன்ற கருத்துக்கள் அடங்கிய பதிவுகளையே அவரது ட்டுவிட்டர் பக்கத்தில் பார்க்க முடிகிறதாகவும், அடுத்த விவாகரத்திற்கு ரெடியாகிறாரா? எனவும் நெட்டிசகள் விமர்சித்து வருகின்றனர்.

Views: -

0

0