திரையில் மீண்டும் வடிவேல் – சிங்கமுத்து காமெடி.? பகையை மறந்து நடிக்க தயாராகின்றனரா.?

1

தமிழ் திரையுலகில் தமிழில் காமெடி கிங்காக வலம் வந்தவர் தான் நடிகர் வடிவேலு. தற்போது, இணையதளத்தில் மீம்ஸ் கிரியேட்டர்களின் கதாநாயகன் வடிவேல் தான். அந்த அளவிற்கு, தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் வடிவேல் நடித்த புகைப்படங்கள் விருந்தாக, அமைகிறது. இவர், நடித்துள்ள பெரும்பாலான படங்களிலும் சிறு கதாபாத்திரத்திலாவது நடிகர் சிங்கமுத்துவும் தலைகாட்டி இருப்பார்.அந்த அளவிற்கு இவர்கள் இருவரின் காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே, கடந்த 2007ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நில மோசடி தகராறு காரணமாக இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனைக்கு பின்னர் சிங்கமுத்துவுடன் இணைந்து நடிக்கவோ அவரை பார்க்கவோ நடிகர் வடிவேல் விரும்பவில்லை, பொது நிகழ்ச்சிகளில் கூட அவரை சந்திப்பதை வடிவேலு தவிர்த்து வந்தார். இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை தீர்த்து வைக்க முயற்சி செய்தும், பலன் கிடைக்கவில்லை.


தற்போது, பிரபல இயக்குனர் ஒருவர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து ஆகிய இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகிறாராம். மேலும் வடிவேலு உடன் இணைந்து நடிக்க நடிகர் சிங்கமுத்து சம்மதம் தெரிவித்து விட்டாராம். ஆனால், இதற்கு வடிவேல் தரப்பிடம் இருந்து இதுவரை எந்த ஒரு தகவலும் இல்லை . இவர்கள் ஒன்று சேர்ந்து நடிப்பது என்பது சாத்தியமாகுமா என தெரியவில்லை. ஆனால், இருவரும் சேர்ந்து நடிப்பதை அவர்களது ரசிகர்கள் விரும்புகின்றனர்.

10 January, 2022, 4:57 pm

Views: -

0

0

More Stories