பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நயன்தாரா-வை இறுக்கி அணைத்த சமந்தா !!


நடிகை சமந்தா மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் . பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ , என தொடங்கி இன்றுவரை பலபடங்களில் நடித்து இன்றளவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகை சமந்தா 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.நடிகை சமந்தா சமீபத்தில் தனது காதல் கணவரை கருத்து வேறு பாடு காரணமாக இருவரும் பிரியப்போவதாக “சோசியல் மீடியாவில்’ பதிவிட்டார் . இதனைத்தொடர்ந்து நாக சைதன்யாவும் நாங்கள் இருவரும் பிரியப்போவதை ஒப்புக்கொண்டார் .

தற்போது சமந்தா, விஜய்சேதுபதி , நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படம் , “காத்துவாக்குல ரெண்டு காதல்” விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவர உள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கின. “காத்துவாக்குல ரெண்டு காதல்” படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது . சமந்தாவும் நயன்தாராவும் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாகும் .

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாரா அவர்களுக்கு அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் அவர்கள் செம்ம மாஸாக படக்குழுவினருடனும் , சக நடிகர்களுடனும் பிறந்த நாள் விழா நடத்தியுள்ளார். நயன்தாராவின் பிறந்த நாளை விஜய்சேதுபதி , சமந்தா ,ஆகியோரும் “காதுவக்குல ரெண்டு காதல் ” படக்குழுவினரும் கொண்டாடி வருகின்றனர். அதில் சமந்தா நடிகை நயன்தாராவை கட்டி பிடித்து தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார் . அவர்களின் அருகில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி , மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் உள்ளனர் .

18 November, 2021, 4:14 pm

Views: -

0

0

More Stories