1 கோடி வரைக்கு சம்பளம் கேட்டியே விமலு: இப்போ என்னடான்னா ?


பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக உதயமானவர் நடிகர் விமல். முதல் படமே நல்ல வெற்றிப் படமாக அமைந்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக மாற்றியது. அதன்பிறகு தொடர்ந்து எத்தன், வாகைசூடவா, தூங்கா நகரம் என வெற்றிப் படங்களாக கொடுத்து வந்தார்.

மேலும் சுந்தர் சி இயக்கிய கலகலப்பு, சற்குணம் இயக்கத்தில் களவாணி, பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் Distributor – கள் மத்தியில் நம்பிக்கை நாயகனாக இருந்தார்.

ஆனால் காலத்தின் சூழ்ச்சியில், அதன் பிறகு தொடர் தோல்வி படங்களை கொடுத்து சோகத்தில் இருந்தவருக்கு மன்னர் வகையறா என்ற திரைப்படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்தை அவரே தயாரித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது, இருந்தும் படம் ஓடவில்லை.

இந்நிலையில் மீண்டும் கதை தேர்வில் சொதப்பி வருகிறார். இதனால் கிட்டத்தட்ட ஒரு கோடி வரை சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த விமல் தற்போது பட வாய்ப்பு இல்லாததால் தனது சம்பளத்தை 15 லட்சமாக குறைத்து விட்டாராம். சினிமாவில் அறிமுக நடிகர்கள் வாங்கும் சம்பளம் அளவுக்கு இறங்கி விட்டாரே என்று அவரது வெறிபிடித்த ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

1 February, 2022, 9:58 am

Views: -

3

8

More Stories