பிரபல நடிகையுடன் ஜோடி சேர மறுத்த விஜய் சேதுபதி..! காரணம் இதுதானா..?

பிரபல நடிகர் விஜய் சேதுபதி தனது வித்தியாசமான உடல் மொழி கொண்ட நடிப்பாலும், தனது யதார்த்தமான குரல் வளத்தாலும், நல்ல குணத்தாலும் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரம் ஆகி விட்டார்.
மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி, எல்லா வித மக்களுக்கும் உதவும் மனம் கொண்டவர்.

இவர் விஜய்க்கு வில்லனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கில் உப்பெனா என்னும் தெலுகு படத்தில் வில்லனாக நடித்து அங்கிருக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம் போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டார். தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் அனாபெல்லா சேதுபதி படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. அது மட்டும் இல்லாமல் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார்.

தமிழ் படம் ஒன்றில் இவருக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கு நாயகி க்ரீத்தி ஷெட்டியை பேசிவந்தனர். ஆனால் அதற்கு விஜய் சேதுபதி நோ சொல்லிட்டாராம். அதற்கு காரணம் சமீபத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார் க்ரீத்தி ஷெட்டி. அதனால் மகளாக நடித்தவருடன் ஜோடியாக நடிக்க முடியாது என்று கூறியுள்ளார் விஜய் சேதுபதி.
Views: -

0

0