தியேட்டர்களில் ரிலீஸாகிறது சிவகார்த்திகேயனின் ‘டான்’ : மாஸ் வீடியோவுடன் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..!!

1

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து டான் திரைப்படத்தை தயாரித்துள்ளது. டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

டாக்டர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் டான். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிக்கப்பட்டு படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்த நிலையில், டான் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

காலேஜ் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள டான் படத்தில், சிவகார்த்திகேயன் கல்லூரி மணவராக நடித்துள்ளார். இப்படம் எப்போது வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், டான் திரைப்படம் மார்ச் 25ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இணையத்தில் வெளியாகி உள்ள இந்த அறிவிப்பால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

31 January, 2022, 11:26 am

Views: -

0

0

More Stories