நடிகையை விவாகரத்து செய்து வில்லன் மகளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்த பிரபல நடிகர் : ஆனா வட போச்சே!!

தமிழ் சினிமாவில் தனக்கென உரிய பாணியை வைத்துள்ள நடிகர்கள் ஒரு சிலரே. குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து பெயர் புகழை சம்பாதித்தவர் பட்டியலில் இவருக்கு என்று தனி இடமுண்டு.
அந்த நடிகர் வேறு யாருமில்லை நடிகர் சரத்பாபு அவர்கள். அழகான தோற்றமும், வசீகர குரலுக்கு சொந்தக்காரரான இவர், பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

ஆந்திராவில் பிறந்த சரத்பாபு போலீஸ் அதிகாரியாக வர வேண்டும் என நினைத்தார். ஆனால் நண்பர்களின் தூண்டுதலால் சினிமாவுக்கு நுழைந்தார். நிழல் நிஜமாகிறது படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் ஆந்திராவின் புகழ் பெற்ற நடிகையான ரமா பிரபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரமா பிரபா ஆரம்பத்தில் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். சர்வர் சுந்தரம், பட்டணத்தில் பூதம், சாந்தி நிலையம் உட்பட ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர்.
பார்ப்பதற்கு ஒன்று தெரியாத பூனை போல இருக்கும் சரத்பாபு முதலில் ரமா பிரபாவை திருமணம் செய்தார். பின்னர் தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன்களில் ஒருவரான எம்என் நம்பியாரின் மகளை உருகி உருகி காதலித்தார்.

இந்த விவகாரம் வெளியே வர.. ரமா பிரபா சரத்பாபுவை விவாகரத்து செய்தார். இதையடுத்து 1990ஆம் ஆண்டு நம்பியாரின் மகளான சினேகா நம்பியாரை திருமணம் செய்த சரத்பாபு பல்வேறு தொந்தரவு அளித்ததால், சினேகா அவரை விட்டு பிரிந்தார்.

எப்போதும் இளமை தோற்றத்திலே இருப்பதால் அடுத்த திருமணத்திற்கு தயார் என சமீபத்தில் சரத்பாபு அறிவித்திருந்தார். ஆனால் அதன் பின் சரத்பாபு தனியாகவே வாழ்ந்து வருகிறார். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரும், குணச்சித்திர நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Views: -

0

1