“இனிமே நான் தல இல்ல..” – அஜித் அதிரடி.. இன்னா தல..


இனிமே நான் தல இல்லன்னு தலையே சொல்லிட்டாரு..H. வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. ஷூட்டிங் முடித்து விட்ட களைப்பில் வீட்டில் படுத்து தூங்காமல் குஷியாக பைக்கை எடுத்து ஊர்சுற்ற கிளம்பி விட்டார் நம்ம தல. வலிமை போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

அடிக்கடி அறிக்கை விடும் அஜித் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், என் உண்மையான ரசிகர்களுக்குநா ஒன்றை சொல்கிறேன்,

இனிமே தயவு செஞ்சு என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது AK என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தலைன்னு கூப்பிடாதீங்க என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதை பார்த்த தல ரசிகர்கள், Sorry Ajith ரசிகர்கள்.. ” இன்னா தல” என்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

மேலும் வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் Promo இன்று மாலை 7 மணி அளவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 December, 2021, 3:09 pm

Views: -

1

1

More Stories