“குழந்தை எப்போன்னு கேட்காதீங்க..” சென்ராயன் மனைவி கண்ணீர் !

1

நடிகர் சென்ராயன், தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். பொல்லாதவன், ரௌத்திரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்தாலும், மூடர் கூடம் படத்தின் மூலம் அதிகம் பிரபலமானார். அதிலும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று மேலும் பிரபலமடைந்தார்.

பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த சென்ராயனுக்கு சமீபத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தது. பிக்பாஸிற்கு பிறகு இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு செம்பியன் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறினார்.

அதன்பின் தற்போது அவருக்கு மீண்டும் ஒரு மகன் பிறந்துள்ளதார். இதுவரை தனது குழந்தைகளை வெளி உலகிற்கு காட்டாமல் இருந்த சென்ராயன், தற்போது அவர்களை பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார். அதில், சென்ராயன் மனைவி, ” புதுசா கல்யாணம் ஆனவர்களை பார்த்து குழந்தை எப்போ வரும்னு கேக்காதீங்க” என்று கூறி கண் கலங்கின இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது..

20 August, 2021, 6:09 pm

Views: -

3

0

More Stories