ஆடை குறைப்பில் ஆடி தள்ளுபடி வழங்கும் தமன்னா… ஒன்னும் சொல்லமுடியாமல் மென்னு முழுங்கும் ரஜினி!

1

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் தயாராகிய ஆந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அதையடுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்து வருகிறார்

இந்நிலையில் தமன்னாவின் இந்த திடீர் கவர்ச்சியும், பலான படங்களில் நடிப்பது குறித்தும் பேசிய பிரபல சினிமா விமர்சகர் வித்தகன், ” தமன்னா நடிக்க வந்த புதிதில் கவர்ச்சிக்கு அளவு வைத்து நடித்துக்கொண்டிருந்தார். கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவர்ச்சி காட்ட சொன்னாலும் அதெல்லாம் முடியாது வேற ஹீரோயின் வச்சி எடுத்துக்கோங்க என சீன் போடுவராம். ஆனால், தற்போது புது நடிகைகளின் வரவால் வைப்பில்லாமல் போனதும் 33 வயசு ஆகிவிட்டதால் இன்னும் ஒரு சில வருடங்களே ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தாறுமாறான கவர்ச்சி காட்டி நடித்து பணத்தை சம்பாதிக்கிறார்.

இப்போ அவர் ஆடை குறைப்பை வைத்து தான் ரேட் பேசுகிறாராம். அதன் எதிரொலி ரஜினியின் ஜெயிலர் படத்திலும் தென்பட்டுள்ளது. காவாலா பாடலுக்கு குட்டை ஆடையில் அப்படிஒரு ஜல்சா நடனம் ஆடியிருப்பார். இதனை ரஜினி என்ன சொல்வதென்றே தெரியாமல் மென்னு முழுங்குகிறாராம். மேலும் படத்தின் இயக்குனர் நெல்சனும் தமன்னாவின் கவர்ச்சி படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வருமோ என அஞ்சியுள்ளாராம்.

15 July, 2023, 4:36 pm

Views: -

0

0

Tags: Tamannaah
More Stories