Style-ஆ, கெத்தா செம்ம Mass-ஆக வந்து இறங்கிய அண்ணாத்த பட First Look இதோ..!

விஸ்வாசம் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களது இயக்கத்தில் அண்ணாத்த என்னும் படத்தில் நடித்து முடித்துவிட்டார் ரஜினி. ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு முழுதும் முடியாமல் 10 நாட்காளான வேலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது எல்லோரும் போல் வீட்டில் இருந்தபடியே இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
இந்த நிலையில் ஏற்கனவே ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது தல அஜித் நடிக்கும் வலிமை படம் கூட தீபாவளிக்கு வெளியாகும் என ஒரு தகவல் வந்துள்ளது.
மேலும், படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே எடிட்டிங் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் படம் ஓரளவுக்கு முடிந்துவிட்டது.
அதிலும் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருந்த நிலையில், இப்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் தலைவர் சும்மா வானத்தை பார்த்தபடி செம்ம மாஸ் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். மேலும் ‘அண்ணாத்த’ படத்தின் மோஷன் போஸ்டர், மாலை 6 மணிக்கும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெறிக்க விட்டு வருகிறார்கள்.
Views: -

4

1