” அந்த Song ரொம்ப Hot-ஆ இருக்கும்…” SJ SURYA open Statement !


சிவகார்த்திகேயன் நடிக்கும் டான், சிம்பு நடிக்கும் மாநாடு, பொம்மை, கடமையை செய் என பல படங்களில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, தற்போது Web Series ஒன்றில் நடிக்கப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது.

அதாவது முன்னணி நடிகர்கள் பலரும் வெப்சீரிஸில் நடிப்பது போல இவரும் முதன்முறையாக வெப்சீரிஸ் களமிறங்குகிறார். Netflix ஓடிடி நிறுவனம் தயாரிக்கும் வெப்சீரிஸ் ஒன்றில் இவர் நடிக்க போவதாகவும், அதை விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கப்போவதாகவும், சஸ்பென்ஸ் கலந்த திரில்லராக அது உருவாக போவதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், இவர் முதன் முதலில் ஹீரோவாக நடித்த படம் நியூ, இந்த படம் வெளியாகி நேற்றோடு, 17 வருடங்கள் ஆகிறது. இதற்காக டிவிட்டரில் இவரது ரசிகர்கள் பலர், ட்ரெண்ட் செய்து வர, ரசிகர் ஒருவர், அந்த படத்தில் ” மார்கண்டேயா” பாடலை அப்லோட் செய்து விடும்படி கேட்க, உடனே..” அது ரொம்ப Hot-ஆ இருக்கும்… இப்போதைக்கு அப்லோட் செய்ய முடியாது” என்று ஓபனாக கூறிவிட்டார் எஸ்.ஜே. சூர்யா. உடனே பியார், ப்ரேமா காதல் பட இயக்குனர் இளங்கோ, “நியூ படத்தின் எஸ்.ஜே. சூர்யா கட் வேண்டும்” என்று கேட்க, “அந்த எஸ்.ஜே.சூர்யா, இப்போ நல்லா பையன் ஆயிட்டான்” என்று கூறியுள்ளார்.

10 July, 2021, 9:25 am

Views: -

0

2

More Stories