இசைஞானி இளையராஜாவை சீண்டும் பாடகி சின்மயி..!


சர்ச்சையான கருத்துகளால் ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் பாடகி சின்மயி, தற்போது இசைஞானி இளையராஜா குறித்து சர்ச்சையைக்குரிய வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான 5 ஸ்டார், பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன், ஜீவன் நடித்த திருட்டுபயலே, விக்ரம் நடிப்பில் வெளியான ‘கந்தசாமி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் சுசி கணேசன்.

இந்நிலையில் சுசி கணேசன் படத்திற்கு முதல் முறையாக இளையராஜா இசையமைக்கிறார். 80-களில் மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இப்படம் உருவாகவிருக்கிறது. வஞ்சம் தீர்த்தாயடா படத்தை 4வி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, விரைவில், இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ‘வஞ்சம் தீர்த்தயாடா… வாவ்… இந்த இயக்குனர் லீனாவிடம் அதிகமாக அதைத்தான் செய்து வருகிறார். ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவருடன் பணியாற்றுகிறோம் என்பது ராஜா சாருக்கோ அல்லது அவரது குழுவுக்கு தெரியாதா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

10 January, 2022, 2:26 pm

Views: -

4

9

More Stories