சிம்பு, எஸ்.ஜே. சூர்யா தெறிக்கவிடும் மாநாடு படத்தின் டிரைலர் !

இந்த வருடத்தில் மிக அதிகமாகப் பேசப்பட்ட விஷயம் என்ன என்றால், என்னன்னா சிம்பு தனது உடம்பை குறைத்து, ஷூட்டிங்கில் சரியான நேரத்திற்கு போய் இவரின் படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆகப் போவது பற்றி தான். 30 நாட்களில் சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தயும் தீபாவளிக்கு உறுதி செய்துவிட்டு, வெந்து தணிந்தது காடு படத்திற்கு கிளம்பிவிட்டார் சிலம்பரசன்.
Time Table போட்டு பெண்டிங்கில் இருக்கும் எல்லாம் படங்களையும் முடிக்க வேண்டும் என்று வெறியோடு இருக்கிறார். இந்தநிலையில், சிம்புவின் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் அரசியல் படமாக இருக்கும் என்று எண்ணினால், ஹாலிவுட்டில் Release ஆன Tenet படம் போல் ரீவைண்ட் மோடில் வெளியிடப்பட்டு இருப்பது ரசிகர்களை மேலும் குழப்பி இருக்கிறது. டைம் மெஷின் படமா? என்கிற சந்தேகத்தையும் கிளப்பி உள்ளது. ஆக இந்த படத்தில் அரசியலையும் தாண்டிய விசயங்கள் இருக்கும் என்பது உறுதியாக தெரிகிறது. இந்த டிரெய்லரை ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.
Views: -

0

0