சீரியலுக்கு வந்த அனிதா சம்பத் – வைரலாகும் சில்லுனு ஒரு காதல் Serial Promo !

முன்பெல்லாம் சினிமாவில் நடிப்பவர்கள் கூட சிலரை தாண்டி அதிகம் யாரும் பிரபலமாவது இல்லை. ஆனால் இப்போது செய்தி வாசிப்பாளர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கிவிட்டனர். அதில் கவனிக்கத்தக்கவர் அனிதா சம்பத். Sun தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள்.
இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை, இந்த மரியாதை எல்லாம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நன்றாக இருந்தது. இவர் விளையாடிய விளையாட்டை பார்த்த ரசிகர்களுக்கு இவரை கொஞ்சம் பிடிக்காமல் போனது. தற்போது BB ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இப்போது அவர் சீரியலில் கால் தடத்தை பதித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒற்றை ஆளாய் கலக்கி, தற்போது சின்னத்திரை உலகத்தை கலக்க வந்திருக்கிறார். அந்த வகையில், கலர்ஸ் டிவியில் தினமும் இரவு 9 மணியளவில் ஒளிபரப்பாகும் மெகாதொடர் “சில்லுனு ஒரு காதல்” என்னும் சீரியலில் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளார். அந்த Promo தற்போது வெளியாகி வைரலாக பரவுகிறது.
Views: -

5

1