ரோஜா சீரியல் நடிகை காஞ்சனா படத்துல நடித்ததை, நோட் பண்ணீங்களா…?

1

சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் ரோஜா சீரியல் ஹீரோயின் தான் பிரியங்கா, சன் டீவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஓன்று ரோஜா. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளது இந்த தொடர்.

இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு ஒருசில சினிமா படங்கள் என சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.

இந்தநிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘காஞ்சனா 3’. பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தினை இயக்கி, நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார் பிரியங்கா. அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

19 July, 2021, 1:04 pm

Views: -

29

11

More Stories