பல நூறு கோடி ரூபாய் ஜீவனாம்சத்தை ஏற்க மறுத்த சமந்தா..? ? நாக சைதன்யா – சமந்தா விவகாரம்..!

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சமந்தா ஆக்கினேணி என்ற பெயரை “S” என்று மாற்றி விட்டார், அந்த சர்ச்சை சுற்றி கொண்டிருந்த வேளையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், தனது நண்பர்களுடன் திருப்பதிக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார் சமந்தா.
அப்போது நிருபர் ஒருவர் உங்களைப் பற்றி வதந்திகள் வந்து கொண்டிருக்கிறதே என்று கேட்டுள்ளார். அதற்கு கோபமடைந்த சமந்தா, ‘கோயிலுக்கு வந்து இதைக் கேக்கறீங்களா, புத்தி இருக்கா” என காட்டமாக பதிலளித்தார்.
நாக சைதன்யாவிற்கும் சமந்தாவிற்கும் விரிசல் விழுந்துவிட்டதாக அனைவரும் யூகித்து வந்த நிலையில், தற்போது நாக சைதன்யாவும் சமந்தாவும் பிரிந்துவிட்டதாக இருவரும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் நாக சைதன்யா குடும்பம் சமந்தாவிற்கு ஜீவனாம்சமாக பல நூறு கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் சமந்தா ஏற்க மறுத்துவிட்டார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Views: -

0

1