விவாகரத்து வாங்கிய நாக சைதன்யா – சமந்தா !


தென் இந்திய பிரபல நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யா, இருவருக்கும் 2017 – இல் திருமணம் நடந்தது. கோவா கடற்கரையில், பல பிரபலங்களுக்கு மத்தியில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.

இதற்க்கு முன், நடிகர் சித்தார்த்துடன் காதலில் இருந்து பின்னர் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்குள் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல் பரவியது.

பின் சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து வருகின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன், இருவரது நடிப்பில் வெளிவந்த மஜிலி திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தன்னுடைய குடும்ப விழாக்களை புறக்கணித்து வருவதால் கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்து டோலிவுட் வட்டாரத்தில் முணு முணுக்கப்படுகிறது. சில வருடங்களுக்கு முன், நாகார்ஜுனா குடும்பத்தில் நாகேஸ்வரராவின் பேரன் ஆதித்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குடும்பத்தின் மூத்த மருமகளான சமந்தா இந்த விழாவில் பங்கேற்கவில்லை.

இதற்கு முன்னர் கூட நாகார்ஜுனாவின் குடும்ப விழாவான அக்கினேனி தேசிய விருது விழா நடைபெற்றது. இதில் பல்வேறு பரபலன்கள் கலந்துகொண்ட சமந்தா மட்டும் பங்கேற்கவில்லை. இந்தநிலையில், கணவர் நாக சைத்னயாவை சமந்தா பிரியவுள்ளார் என சமந்தா அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். இப்படி ஒரு அறிவிப்பு வரக்கூடாது எல்லாம் வதந்தி என்று வரவேண்டும் என்று எண்ணிய ரசிகர்களுக்கு அதிர்ச்சி.

 

2 October, 2021, 3:51 pm

Views: -

1

0

More Stories