சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 5 பிரபலம்…!

அனைவரது வீடுகளிலும் நம்ம வீட்டுப்பிள்ளையாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது இவரது நடிப்பில் வெளியான டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து அயலான் ய படத்தை தொடர்ந்து, அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா அருள் மோகன் இந்தப் பட த்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 5 இல் பங்கு பெற்று வரும் ராஜூ ஜெயமோகன் சிவகார்த்திகேயன் தான் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ராஜூ ஜெயமோகன் பிக்பாஸில் கலகலப்பாக இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் உட்பட சில சீரியல்களிலும், நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Views: -

3

1