ரெடி, டேக், ஆக்ஷன்..! இணையத்தில் மிரட்டும் ராஜமௌலியின் RRR படத்தின் மேக்கிங் வீடியோ


பாகுபலி ஒன்றாம் பாகம் இரண்டாம் பாகம் கொடுத்த வெற்றிகளுக்குப் பிறகு, தற்போது RRR படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, அலியா பட், ஒலிவா மோரீஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். சுமார் 450 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தயாராகி வருகிறது. RRR படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக ராஜமெளலி உறுதிசெய்துள்ளார்.

இந்நிலையில் ‘RRR’ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சுதந்திர காலத்தில் நடப்பது போல கதை அமைந்துள்ளது. பயங்கர பொருட்செலவில் எடுக்கப்படும் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவும் வேற லெவல் பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்த வீடியோவில் பெரும்பாலும் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருப்பதால், படத்தில் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது. பல மொழிகளில் வெளியாக இருப்பதால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த மேக்கிங் வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

15 July, 2021, 1:09 pm

Views: -

7

1

More Stories