ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தில் இடம்பெறும் 60 வருடத்திற்கு முன் வெளியான பாடல்…!


தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக இருந்து சினிமா இயக்குனராக மாறியவர்கள் சிலர். அதில் பிரபுதேவா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகிய பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். குதிரை பிரபுதேவா போக்கிரி வில்லு ஆகியது படங்களையும் லாரன்ஸ் முனி காஞ்சனா காஞ்சனா 2 பேய் படம் வரிசையாக எடுத்து வருகிறார்.

அவ்வபோது மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வரும் ராகவா லாரன்ஸ் தற்போது வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். அதன்பின் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் கதிரேசன் என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் 1962 ஆம் ஆண்டு வெளியான வீரத் திருமகன் படத்தில் வரும் பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் பாடலை ரீமிக்ஸ் செய்து ருத்ரன் படத்தில் பயன்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடலை விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். கண்ணதாசன் எழுதிய பாடல் இன்றுவரை பேமஸ் ஆக இருந்து வருகிறது.

20 October, 2021, 10:23 pm

Views: -

3

0

More Stories