VIDEO-குக் வித் கோமாளி அஷ்வின் – புகழ் இணையும் முதல் படத்தின் பூஜை !


விஜய் டிவி மூலம் பிரபலமாகி அதன்பின் சினிமாவிற்கு காலடி எடுத்து வைப்பது இப்போது டிரெண்ட் ஆகி விட்டது. அந்த வகையில் திவ்யதர்ஷினி, ரம்யா, பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, சிவகார்த்திகேயன், சந்தானம், தீனா, மைனா நந்தினி, இவர்களெல்லாம் விஜய் டிவி மூலம் பிரபலமடைந்து அதன்பின் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர்கள்.

இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் மிக பெரிய வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், பாலா 2 பேருமே கலந்துகொண்டு பலரையும் சிரிக்க வைத்தார். இப்போது புகழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

இப்போது புகழை தொடர்ந்து அதில் கலந்து கொண்டுள்ள அஷ்வின், ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படம் முழுவதும் அஸ்வினுடன் டிராவல் செய்யக்கூடிய காமெடி கேரக்டராக நடிகர் புகழ் நடிக்கிறார். நிஜ வாழ்க்கையிலும் அஸ்வினின் நெருங்கிய நண்பரான புகழ், இந்த திரைப்படத்தில் நடிப்பது இவர்களின் காம்போ மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. தற்போது இவர்கள் நடிக்கும் ” என்ன சொல்ல போகிறாய் ” என்னும் படத்தின் பூஜை வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

10 July, 2021, 9:22 am

Views: -

2

0

More Stories