கணவரை பிரிந்து வாழ முடிவெடுத்துள்ள பாலிவுட் நடிகை..! வைரலாகும் பிரச்சனை..!


பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தமிழில் mr. ரோமியோ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். ஒரு சில பாடல்களில் ஆடியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக இருந்துள்ளார். சில வருடங்களுக்கு முன் ராஜ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார்.

ஷில்பா ஷெட்டிக்கும், ராஜ்குந்த்ராவிற்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா தனது குடும்பத்துடன் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ஆபாச படங்களை தயாரித்து, விற்பனை செய்ததாக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பாலிவுட் சினிமாவில் இந்த பிரச்சனை பரபரப்பாக பேசப்பட்டது. இதில் ராஜ்குந்த்ராவிற்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதால், அவருக்கு சீக்கிரம் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஷில்பா ஷெட்டி கணவரையும், அவர் சார்ந்த விஷயங்களையும் பிரிந்து, புது வாழ்க்கையை வாழ முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் வட்டாரத்திலும் இணையத்திலும் கிசுகிசுக்கப்பட்டாலும் , அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்கள் கிடைக்கவில்லை.

2 September, 2021, 9:50 pm

Views: -

0

0

More Stories