பெண்ணின் மனதை தொட்டு படத்தில் நடித்த ஹீரோயினா இது ? வைரல் Photos !

நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான பெண்ணின் மனதை தொட்டு திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஜெயா சீல், நல்ல நடிப்பை வெளிக்காட்டிய இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நம் தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை. குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள். அந்த வகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அதில் நம்ம கண்ணமா ஜெய சீல் அவர்களும் ஒன்று.

இவர், தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளில் கலக்கியவர். நடிப்பு மட்டுமின்றி நடனம் ஆடுவதிலும் மாஸ் காட்டும் ஜெயா, சீரியல்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இவர் கடந்த 2004ம் ஆண்டு தபேலா பிளேயரான பிக்ரம் கோஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில், பெங்காலி படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாராம்.

தற்போது, 42 வயதாகும் இவர் இப்போதும் பார்ப்பதற்கு 24 வயது பெண் போலவே இருக்கிறார் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Views: -

9

4