அட இது எப்போதிலிருந்து? சாய் பல்லவியை ரகசியமாக காதலிக்கும் விவாகரத்தான நடிகர் இவர் தான்!


நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

sai pallavi

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இந்நிலையில் சாய் பல்லவி மீது தனக்கு நீண்ட வருடங்களாக க்ரஷ் இருப்பதாக நடிகர் ஒருவர் கூறியிருப்பது வைரலாகி வருகிறது. ஆம், பாலிவுட் நடிகரான குல்ஷன் தேவய்யா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சில காலமாக என்னுடைய கிரஷ் சாய் பல்லவி தான். அவரின் செல்போன் நம்பர் என்னிடம் இருந்தும் எனக்கு பேசுவதற்கு தைரியம் இல்லை. மேலும் அவர் சிறந்த நடிகர் டான்ஸ் என்றும் தெரிவித்துள்ளார். வெறும் கிரஷ் தான், அதை தாண்டி எதுவும் இல்லை. அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். இது சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வைரலாகி வருகிறது.

30 May, 2023, 4:14 pm

Views: -

0

0

More Stories