நயன்தாராவை கட்டி பிடித்து கொஞ்சிய விக்னேஷ் சிவன் !

1

தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார். நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது.
ஆனாலும் எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.

இந்தநிலையில், நயன்தாரா தனது காதலர் ஆன விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு தனது வீட்டினை மிகவும் பிரமாண்டமாக லைட் செட்டிங் செய்து அதன் பிறகு அவர் பெயர் போட்டு cake வெட்டி அவரது பிறந்த நாளை இரவு முழுக்க மிகவும் சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் அவரது சமூக வலைத்தளத்தில் “நன்றி தங்கமே, இந்த சர்ப்ரைஸ் நான் எதிர்பார்க்கல” என்று கட்டிப்பிடித்துக் கொஞ்சியபடி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்

18 September, 2021, 4:20 pm

Views: -

0

0

More Stories