மாஸ் காட்டும் விஜய் சேதுபதி..! லவ்ஸ் கூட்டும் சூர்யா..! வெளியானது நவரசா படத்தின் டிரைலர் !


9 இயக்குநர்கள் 9 வித உணர்வுகளை பிரதிபலிக்கும் 9 குறும்படங்களை உள்ளடக்கிய நவரசா எனும் ஆந்தாலஜி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

CORONA காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன. சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் 4,5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. பழையபடி சினிமா சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் தொடங்கிவிட்டது. ஆனாலும் மக்களுக்கு பொழுது போக முடியாமல் அமேசான் நெட்பிளிக்ஸ் OTT Platform-களில் இருக்கும் அனைத்து படங்களையும் Web Series-களையும் பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில், பாவக்கதைகள் என்னும் Anthology படத்தை தொடர்ந்து Netflix தற்போது நவரசா என்னும் Anthology படத்தை வெளியியாக இருக்கிறது. நவரசா ஆந்தாலஜியில் 9 கதைகளை பிரியதர்ஷன் கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், வசந்த் சாய் , பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இசையமைப்பாளர்களாக ஏ.ஆ.ரஹ்மான், இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்கள். இதில் கெளதம் மேனன் இயக்கும் ஒரு பாகத்தில் சூர்யா நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இதன் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியான நிலையில் தற்போது நவரசா படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இது மெகா கூட்டணி என்பதால் ரசிகர்களும் இந்த படத்திற்கான வெறி கொண்ட வேங்கையாக காத்து கிடக்கிறார்கள்.

27 July, 2021, 2:53 pm

Views: -

12

1

More Stories