தனுஷின் நானே வருவேன் படத்தின் மாஸான அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு…! குஷியான ரசிகர்கள்..!


தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் உருவாக இருக்கும் நானே வருவேன் படத்தின் ஒரு போஸ்டரை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர். அதன் பின் அந்த படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட் வராத நிலையில் தற்போது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அந்த படத்தை பற்றிய ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனைத்து படங்களும் மாபெரும் ஹிட்டானது. மக்களுக்கு மிகவும் பேவரட் காம்பினேஷன் இவர்கள் இருவரும் தான். தற்போது கூட புதுப்பேட்டை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன போன்ற படங்களை பற்றி பெருமையாக பேசி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்க இருப்பதாகவும் அதில் தனுஷ் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் 2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ளதால் அதற்கிடையில் இதே காம்பினேஷனில் நானே வருவேன் என்ற படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் செல்வராகவன்.

தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் நானே வருவேன் படத்தின் போஸ்டரை வெளியிட்டு இடைவிடாத படப்பிடிப்பு இன்று முதல் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று சில மாதங்களில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

16 October, 2021, 7:17 pm

Views: -

1

1

More Stories