வடிவேலு Mass Comeback – NAAI SEKAR RETURNS FIRST LOOK !


வடிவேலு, சுராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு நாய்சேகர் Returns என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது தாறுமாறாக வெளியாகியுள்ளது. முதலில் இந்தப் படத்துக்கு ‘நாய் சேகர்’ எனத் தலைப்பு வைக்க முடிவு செய்தார்கள். ஆனால், சதீஷ் நடித்துள்ள படத்துக்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

மேலும் நீ நாய் சேகர் என்றால் நான் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்று முகத்தில் மரு ஓட்டுவது போல் மாறுவேடத்தில் வந்துள்ளார் தலைவர் வடிவேலு. இந்த ஃபர்ஸ்ட் லுக் – ஐ அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் உற்சாகமாகப் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

9 October, 2021, 10:26 am

Views: -

0

0